![]() |
மரச்செக்கின் நன்மைகள் |
மரச்செக்கின் நன்மைகள் :
நம் முன்னோர்கள் பின்பற்றிய பாரம்பரியமான விஷயங்களைக் கைவிட்டு அனைத்திலும் நவீனத்தைஏற்பதுதான் நாகரிகம் எனநினைத்துக்கொண்டிருக்கிறோம். அதனால் நாம்இழந்தவை, இழந்து கொண்டிருப்பவை ஏராளம். அப்படிஇழந்தவற்றில் முக்கியமானது மரச் செக்கில் பிழியும்எண்ணெய்.
ஏன் மரச்செக்கு எண்ணெய் பயன்டுத்தவேண்டும்?
செக்கு என்பது எண்ணெய் வித்துக்களில் இருந்துஎண்ணெய் எடுக்கும் ஒரு கருவி ஆகும். சிறிய அளவுமின்சார இயந்திரத்தைக் கீழே பொருத்தி, வாகைமரத்தில் செய்யப்பட்ட செக்கைக் கொண்டுதான்எண்ணெய் எடுக்கப்படுகின்றது. இதனை பெரும்பாலும்கிராமங்களில் சமையல் எண்ணெய் எடுக்கபயன்படுத்துகின்றனர்.
பலபேர் செக்கு எண்ணெய் என்றால் அது மரச்செக்குஎண்ணெய் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம்,இதுதவறு. மரச்செக்கில் எண்ணெய் ஆட்டும்பொழுதுஅதிகபட்சம் 35டிகிரி வெப்பம் மட்டுமே வரும்.இதில்உயிர்ச்சத்துக்கள் ஒருபோதும் அதன் தன்மையைஇழப்பதில்லை.இதுவே நம் உடலுக்கும் உயிருக்கும் முழுநன்மை வழங்கும் தாவர எண்ணெய்.
சமையல் எண்ணெய் ஒரு குறிப்பிட்ட சூட்டுக்கு மேல்பயன்பாட்டுத் தன்மையை இழக்கிறது.இயந்திரச் செக்கில் எண்ணெய் எடுக்கும் போது அதன்வேகத்தால் எண்ணெய் அதிக சூடாகிறது. மேலும்Refined என்ற பெயரில் சில ரசாயனங்கள்கலக்கப்படுகிறது. 30 வருடங்களுக்கு முன் இல்லாதபுதுப்புது நோயெல்லாம் தோன்றக் காரணம் நமதுஉணவுப் பொருட்களே.

மரச்செக்கு முறை பாரம்பரியமானது. எந்தகலப்படமும் இல்லாத சுத்தமான கருப்பட்டிகொண்டு தான் அரைத்து எடுக்கிறோம். மரச்செக்கில் கருப்பட்டியுடன் சேர்த்து எள்ளை ஆட்டும் போது மரச்செக்கில் அவ்வளவாக வெப்பம் ஏறாது. அப்படியே ஏறும் குறைந்த வெப்பத்தையும் இந்த கருப்பட்டி சரி செய்து ஒரு வெப்ப சமமாக்கல் இயற்பியல் தத்துவத்தை அங்கே செயல்படுத்துகிறது. இதனால் இப்படி மரச்செக்கில் ஆட்டி பிழிந்தெடுக்கப்படும் நல்லெண்ணெய்க்கு ஒரு அபாரமான மணமும், குணமும் இருப்பது இயற்கையே. நல்லெண்ணெய் மட்டுமின்றி கடலெண்ணெய், தேங்காய் எண்ணெய் செக்கில் ஆட்டி எடுக்கப்படுகின்றன.
நம் முன்னோர்கள் உடற்பயிற்சி செய்து முடித்ததும் ஒரு கிண்ணம் நிறைய நல்லெண்ணெய் குடிக்கும் வழக்கத்தையும் வைத்து இருந்தனர். இதை உணவுக்கு மட்டுமின்றி குளியலுக்கும், மசாஜ் செய்வதற்கும், மருத்துவத்துக்கும் உபயோகித்த காரணத்தால் அவர்கள் 80 வயது வரை மூட்டு வலியின்றி கால்நடையாகவே சென்று வந்தனர். அதனால்தான் எல்லாம் அறிந்த நம் முன்னோர்கள் இதை எள் எண்ணெய் என்று சொல்வதற்கு பதிலாக நல்ல எண்ணெய் என்று சொன்னார்கள்
பாரம்பரிய முறைப்படி மருத்துவ குணம் நிறைந்த வாகை மரத்தினால் ஆன மரச்செக்கில் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட முதல் தரமான எண்ணெய் வித்துக்களை கொண்டு ஆட்டப்பட்டு, ஆயுர்வேத முறைப்படி சூரிய ஒளியில் தெளிவிக்கப்பட்ட நல்லெண்ணெய், கடலெண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய், மனித உடலுக்கு மிகவும் நன்மையானது.
விவசாயிகளின் வளர்ச்சியே எங்கள் எழுச்சி
விவசாயகளின் வளர்ச்சிக்கு நாங்கள் என்றுமே உறுதுணையாக இருந்து வருகிறோம். இதற்காக விவசாயிகளிடமிருந்து விவசாய பொருட்களை நேரடியாக சென்று கொள்முதல் செய்கின்றோம்.
நன்றி
ழகரம்

#LAGARAM
Lagaram
Comments
Post a Comment