உணவைப் பற்றி நம் வள்ளுவன்



உணவைப் பற்றி நம் வள்ளுவன்...

சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை,பத்துப்பாட்டு,கலித்தொகை போன்ற நூல்களின் மூலம் மிகப்பெரிய உணவு சார்ந்த ஆய்வு நம்மிடையே இருந்தது. தமிழர்கள் உணவே மருந்து ,மருந்தே உணவு என்ற கொள்கையில் முழுமையாக வாழ்ந்தவர்கள். நம் முன்னோர்கள் எந்த நோய் நொடியும் இல்லாமல் நல்ல ஆரோக்கியமான சூழலில் வாழ்ந்தமைக்கு இதுவே முக்கிய காரணம். தமிழர்கள் பழங்காலத்தில் பயன்படுத்திய உணவு முறைகளை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம். இப்பொழுது இவ்விலக்கியங்களுக்கெல்லாம்முன்னோடியான நம் வள்ளுவன் கூறியதை காணலாம்.

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று.


என்று ஆரம்பிக்கும் நம் வள்ளுவர் தனது 94ஆம் அதிகாரத்தில், பெரும்பாலான நோய்களுக்கு மூல காரணமாக அமைவதே உணவு தான் என்று உரைக்கின்றார்.
(ø) நாம் உண்ணும் உணவு தூய்மையானதாக இருத்தல் வேண்டும்.
(ø) உணவு தூய்மையானதாக இருப்பினும் அவ்வுணவை அவரவர் உடல் தேவைக்கேற்ப உண்ணல் வேண்டும்.
(ø) உணவைச் சுவைக்காக உண்ணுதல் கூடாது.
(ø) பசிக்கின்றதே என கிடைக்கின்ற தூய்மையற்ற உணவையும் உண்ணுதல் கூடாது.
(ø) உடல் நலத்திற்கேற்ற உணவை உண்ணல் வேண்டும்.
(ø) சுவையுடன் இருக்கின்றது என்பதற்காக உணவை அளவிற்கு அதிகமாக உண்ணுவதும் நோயைத் தரும்.
(ø) முன்பு உண்ட உணவு முழுமையும் செரிமானம் ஆகிய பின்னர் உணவினை உண்ணுதல் வேண்டும். இல்லையேல் முன்னர் உண்ட உணவு விஷமாக மாறும்.
நோய் வருமுன் காப்பதற்கு நாம் உண்ணும் உணவே சிறந்த வழி என்று நமக்கு தெளிவூட்டுகிறான்.

நன்றி
ழகரம்


#LAGARAM

Lagaram

Comments

Post a Comment