தலையில் தேய்ப்பது தேங்காய் எண்ணெய்யா ? மண்ணெண்ணெய்யா..?

தலையில் தேய்ப்பது தேங்காய் எண்ணெய்யா ? மண்ணெண்ணெய்யா..? 

தலையில் தேய்ப்பது தேங்காய் எண்ணெய்யா ? மண்ணெண்ணெய்யா..?

கடைகளில் தேங்காய் எண்ணெய் வாங்கிச் சாப்பிடும் தோழர்களே சற்று சிந்தியுங்கள்.

தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணெய் விலை கூட வேண்டுமே....அப்படிக் கூடுகிறதா? பெட்ரோலியம் பொருட்கள் விலை கூடும் போதுதான் தேங்காய் எண்ணெய் விலையும் கூடுகிறது. இதன் பின்னணி என்ன?
டாக்டர் மோகனனின் ஆய்வு இதோ. கச்ச எண்ணையில் இருந்து பெட்ரோல்,டீசல் போக கழிவு லிக்யூட் பாரபின்.
பெட்ரோல் தயாரிப்பதற்காக பூமியிலிருந்து எடுக்கப்படும் கச்சா எண்ணெயிலிருந்து வெள்ளை பெட்ரோல், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள் பிரித்தெடுக்கப்பட்ட பிறகு எஞ்சுவதுதான் லிக்யூட் பாரபின் என்னும் கழிவு பொருள். இது கலங்களான எண்ணெய் போன்ற திரவம் இதை மினரல் ஆயில் என்றும் அமெரிக்க மண்ணெண்ணெய் என்றும் அழைக்கிறார்கள். இந்த திரவத்தை பிளீச்சிங் கெமிக்கல் கொண்டு நிறமற்றதாக மாற்றி அதனுடன் தேங்காய் எண்ணெயின் செயற்கை மணம் (flavor essence) கலந்தால் தேங்காய் எண்ணெய் ரெடி அந்தக்காலத்து கொழும்பு தேங்காய் எண்ணெய் மாதிரி மணமும் தூய்மையும் நம்மை ஈர்ப்பதாக இருக்கும் இது ரசாயனத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை எண்ணெய் என்பதும் தேங்காய்க்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்பதும் நமக்குத் தெரியாது. சுத்தமான எந்த எண்ணெய்யும் தண்ணீர் போன்று இருக்காது.
சுத்தமான தேங்காய் எண்ணெயில் வடை சுட்டு மிஞ்சிப்போனால் அது ஊசிப்போகும். உயிர்ச்சத்து உள்ள எண்ணெயில்தான் பூஞ்சை வளரும். செயற்கை எண்ணெயில் வளராது .குளிர் காலங்களில் தூய தேங்காய் எண்ணெய் உறைந்து போகும்.
இது தேங்காய் எண்ணெய்யோடு நின்று விடுவதில்லை. செயற்கை மணம் எந்தப் பொருளுக்கெல்லாம் கிடைக்குமோ அத்தனை பொருட்களும் ரசாயனத் தன்மையோடு தயாரிக்கப் படுகிறது.
குளிர்சிக்காக தலைக்குத் தேய்க்கப்படும் தேங்காய் எண்ணெய்க்குப் பதிலாக மண்ணெண்ணெயைத் தேய்த்தால் உடல் என்ன ஆகும்? அதைப் பயன்படுத்தி சமையல் செய்தால் குடல் என்ன ஆகும்?

Comments