![]() |
வணிகத்தின் அரசியல் |
இது உங்கள் வரலாறு.
சாவிலிருந்த தம் நாட்டை மீட்டு வாழவைத்த வரலாறுகள் பல உள்ளன,அதில் இந்த சவுதி அரேபியாவும் ஒன்று.
இன்றைய தினம் 1938 ஆம் வருடம் சவுதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டு பிடித்தார்கள்.
அதை கண்டு பிடிப்பதற்கு முன்பு வரை சவுதி அரேபியாவில் வாழும் மக்கள் நூற்றிற்கு தொண்ணூற்றைந்து சதவிகிதம் பேர் படிப்பறிவின்றி மிகவும் நலிவடைந்திருந்தார்கள்.அவர் களுடைய தினசரி வேலையே உணவு தேடுவது மட்டும்தான்.அங்கிருக்கும் கழுகுகளை, விலங்குகளை வேட்டையாடி உண்பதும்,ஒட்டகங்கள் மேய்ப்பதையுமே தொழிலாகக் கொண்டு வாழ்ந்து வந்தவர்கள்.அப்படி வாழ்ந்தவர்கள் 1938ஆம் வருடம் தம் மண்ணில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிடித்த பிறகு அடைந்த வளர்ச்சியை அனைவரும் அறிவர். சாவில் இருந்த தம் மண்ணை மீட்டு சரித்திரம் செய்துள்ளனர். இது போன்று பல்வேறு நாடுகள் தம் மண்ணின் வளத்தை அறிந்துகொண்டு , சாவிலிருந்த தம் நாட்டையும் நாட்டு மக்களையும் மீட்டு வாழவைத்த வரலாறுகள் பல உள்ளன ... ஆனால் எண்ணற்ற வளங்கள் கொண்ட நமது தமிழ்நாட்டில் ,தோண்டத் தோண்ட பொக்கிஷங்களை அள்ளிக் கொடுத்த நம் தமிழ் மண்ணில், உணவு முறையிலேயே மருத்துவ மகத்துவத்தை பொதிந்து வைத்திருந்த நம் தமிழ் பாரம்பரியத்தில் உணவுக்காக கை ஏந்தும் நிலை..!
காரணம் ?
தன் மண்ணின் சிறப்பை உணர்ந்ததால் வாழ்ந்த நாடுகளின் மத்தியில் தன் மண்ணின் சிறப்பையும் பெருமையையும் உணர்ந்தும் அதை வீணாக்கும் எண்ணம் நம் மக்களின் மனதில் பேராசை என்ற வடிவில் உருவாக்கப்பட்டது.
அதன் விளைவு ? நம் இனத்தையே வாழ வைத்த மண்ணை, சாகடித்தோம். ஆம் பேராசையால் கழிவுகளை உரமாக பயன்படுத்தி, விளைச்சல் என்ற பெயரில் விஷம் தயாரித்தோம். தம்மை வருத்தி நம்மை காத்த மண்ணை கலங்காது மலடாக்கினோம்..! நமது சுயநல பேராசையால் நம் மண்ணின் வளத்தை அழித்தோம்,நம் மக்களின் வளத்தை அழித்தோம், நம் சந்ததிகளின் வாழ்வாதாரத்தையே அழித்தோம்.
உலகத்திற்கே அறிவு போதனை செய்த நம்மை முட்டாள் ஆக்கினோம்?
என்?
ஏப்படி?
தெரியாது ... தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.! அனைத்தையும் அழித்து மலடாக்கிய பின்பு , ஒரு மலடான நாடாகிய சவுதி அரேபியாவில் வேலைக்கு சேர்ந்து ஒட்டகம் மேய்க்கத் தயார் ஆனோம்.
நம் வளத்தை அழித்து பிறர் நாட்டிலுள்ள வளத்தைப் பெருக்கும் எண்ணம் நமக்குள் எப்படி ஊடுருவியது ? ஏன் உலகத்திற்கே கல்வி அறிவை போதித்த நாம் இன்று முட்டாள்கள் ஆனோம்? ஏன் உலகிற்கே எடுத்துக்காட்டாய் இருந்தவர்கள் இன்று எடுத்துக்காட்ட ஒன்றுமின்றி அயல் நாட்டில் வேலை தேடுகின்றோம்? கால் ரூபாயில் இருந்து கோடி ரூபாய் வரை எது வேண்டுமாயினும் ஏன் அயல் நாட்டு பொருட்களையே நாடுகின்றோம்.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் வெவ்வேறு இன மக்களின் கைக்குள் அடிமைப்பட்டிருந்த காலத்திலும் கூட, யார் கையிலும் சிக்காமல் என்றும் தனித்துவமாக வாழ்ந்த நம் தமிழ் மண் ஏன் இன்று அன்னிய பிடியில் கிடந்து சிக்கித் தவிக்கிறது ?
காரணம் தமிழ் மக்கள் யாரும் தமிழ்நாட்டின் வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை, தமிழனின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள விரும்புவதில்லை. எதிர்காலத்தை இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை . நிகழ்காலத்தை வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டுமென்றால்
நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்மைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் மண்ணைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வரலாற்றைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வருங்காலத்தைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
சிந்தியுங்கள்...!
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.
“வணிக அரசியல்”
வணிக அரசியலின் பிடியில் சிக்கிய நாம் விழித்துக்கொள்ளும் தருணம்.
மாறும் அனைத்தும்.
- வணிகத்தின் அரசியலை அடுத்த பகுதியில் கூறுகிறேன்..!
வாழ்க தமிழ் மக்கள்
நன்றி
ழகரம்
#LAGARAM
Lagaram
சாவிலிருந்த தம் நாட்டை மீட்டு வாழவைத்த வரலாறுகள் பல உள்ளன,அதில் இந்த சவுதி அரேபியாவும் ஒன்று.
இன்றைய தினம் 1938 ஆம் வருடம் சவுதி அரேபியாவில் எண்ணெய் வளம் இருப்பதை கண்டு பிடித்தார்கள்.
அதை கண்டு பிடிப்பதற்கு முன்பு வரை சவுதி அரேபியாவில் வாழும் மக்கள் நூற்றிற்கு தொண்ணூற்றைந்து சதவிகிதம் பேர் படிப்பறிவின்றி மிகவும் நலிவடைந்திருந்தார்கள்.அவர்
காரணம் ?
தன் மண்ணின் சிறப்பை உணர்ந்ததால் வாழ்ந்த நாடுகளின் மத்தியில் தன் மண்ணின் சிறப்பையும் பெருமையையும் உணர்ந்தும் அதை வீணாக்கும் எண்ணம் நம் மக்களின் மனதில் பேராசை என்ற வடிவில் உருவாக்கப்பட்டது.
அதன் விளைவு ? நம் இனத்தையே வாழ வைத்த மண்ணை, சாகடித்தோம். ஆம் பேராசையால் கழிவுகளை உரமாக பயன்படுத்தி, விளைச்சல் என்ற பெயரில் விஷம் தயாரித்தோம். தம்மை வருத்தி நம்மை காத்த மண்ணை கலங்காது மலடாக்கினோம்..! நமது சுயநல பேராசையால் நம் மண்ணின் வளத்தை அழித்தோம்,நம் மக்களின் வளத்தை அழித்தோம், நம் சந்ததிகளின் வாழ்வாதாரத்தையே அழித்தோம்.
உலகத்திற்கே அறிவு போதனை செய்த நம்மை முட்டாள் ஆக்கினோம்?
என்?
ஏப்படி?
தெரியாது ... தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.! அனைத்தையும் அழித்து மலடாக்கிய பின்பு , ஒரு மலடான நாடாகிய சவுதி அரேபியாவில் வேலைக்கு சேர்ந்து ஒட்டகம் மேய்க்கத் தயார் ஆனோம்.
நம் வளத்தை அழித்து பிறர் நாட்டிலுள்ள வளத்தைப் பெருக்கும் எண்ணம் நமக்குள் எப்படி ஊடுருவியது ? ஏன் உலகத்திற்கே கல்வி அறிவை போதித்த நாம் இன்று முட்டாள்கள் ஆனோம்? ஏன் உலகிற்கே எடுத்துக்காட்டாய் இருந்தவர்கள் இன்று எடுத்துக்காட்ட ஒன்றுமின்றி அயல் நாட்டில் வேலை தேடுகின்றோம்? கால் ரூபாயில் இருந்து கோடி ரூபாய் வரை எது வேண்டுமாயினும் ஏன் அயல் நாட்டு பொருட்களையே நாடுகின்றோம்.
உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் வெவ்வேறு இன மக்களின் கைக்குள் அடிமைப்பட்டிருந்த காலத்திலும் கூட, யார் கையிலும் சிக்காமல் என்றும் தனித்துவமாக வாழ்ந்த நம் தமிழ் மண் ஏன் இன்று அன்னிய பிடியில் கிடந்து சிக்கித் தவிக்கிறது ?
காரணம் தமிழ் மக்கள் யாரும் தமிழ்நாட்டின் வரலாறுகளை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை, தமிழனின் பாரம்பரியத்தை புரிந்து கொள்ள விரும்புவதில்லை. எதிர்காலத்தை இங்கு யாரும் எதிர்பார்க்கவில்லை . நிகழ்காலத்தை வாழ வேண்டும் என்பதற்காக எதிர்காலத்தை அழித்துக் கொண்டிருக்கின்றோம். இந்த நிலை மாற வேண்டுமென்றால்
நாம் என்ன செய்ய வேண்டும்?
நம்மைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் மண்ணைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வரலாற்றைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
நம் வருங்காலத்தைக் காக்க நாம் என்ன செய்ய வேண்டும்?
சிந்தியுங்கள்...!
அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில்.
“வணிக அரசியல்”
வணிக அரசியலின் பிடியில் சிக்கிய நாம் விழித்துக்கொள்ளும் தருணம்.
மாறும் அனைத்தும்.
- வணிகத்தின் அரசியலை அடுத்த பகுதியில் கூறுகிறேன்..!
வாழ்க தமிழ் மக்கள்
நன்றி
ழகரம்
#LAGARAM
Lagaram
Comments
Post a Comment