காட்டுத்தீ - இது மனித இனத்தின் மகத்துவம்.


மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு முக்கியத் தூண்டுகோளாக இருந்தது நெருப்பு என்பதை அனைவரும் அறிவர்.நாம் வேட்டையாடி உண்டு வாழ்ந்த காலத்தில் ஒரு காட்டுத் தீயில் இறையாகிய விலங்குகளை உண்டபின் தான் நெருப்பில் உணவை இட்டு உண்ண வேண்டும் என்ற எண்ணமே மனிதனுக்குத் தோன்றியது.அந்த எண்ணமே மனிதனின் இத்தகைய நாகரீக வளர்ச்சிக்கு ஒரு வித்தாக அமைந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது.மனிதன் தன் நாகரீக வளர்ச்சியில் விலங்குகளை சுட்டு சாப்பிடும் எண்ணம் வந்த பிறகு முதன் முறையாக தன்னை வேளாண்மைக்கு பழக்கப்படுத்த தயாரானான்.அப்பொழுது அவன் முதலில் செய்தது ‘காட்டெறிப்பு வேளாண்மை’. அதாவது காடுகளை எறித்து சமநிலை படுத்தி அதில் வேளாண்மை செய்தான்.காட்டெறிப்பு வேளாண்மையை மனிதன் செய்ததற்கு காரணங்கள் அங்கிருக்கும் நிலத்தை சீரமைக்க , மற்றும் மண்ணைப் பதப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த காட்டெறிப்பு வேளாண்மையை அவர்கள் ஆராம்பித்தார்கள். அதன் அடுத்த கட்டமாகவே ஆற்றங்கரை நாகரீகம் வளர்ந்தது. மனித வர்க்கத்தின் அடுத்த மயில் கல்லாக நாம் காண்பது ஆற்றங்கரை நாகரீகமே ஆகும்.
சரி காட்டெறிப்பு வேளாண்மைக்கு முழுமையாக வருவோம் .ஏன் காட்டுத்தீ மனித இனத்தின் மகத்துவம் என்று நான் கூறினேன் என்றால்,
காட்டுத்தீ இல்லையென்றால் மனித இனம் இயற்கைச் சூழலின் அழிவை நோக்கிச் செல்கிறது என்று அர்த்தம். ஓர் இடத்தில் காடுகளில் தீ பறவுவது ஆதிகாலத்திலிருந்து இப்பொழுது வரை நடைமுறையாக நடந்து வரும் சாதாரண நடைமுறையாகும். காடுகளில் உள்ள மரங்களின் அடர்த்தியைக் கொண்டே காட்டுத்தீ பரவி வரும்.காடுகளில் காட்டுத்தீ பரவிவருகிறது என்றால் அங்கு காடுகளின் அடர்த்தி அதிகம், இயற்கை இன்னும் முழுமையாக அழியவில்லை என்று இயற்கை நமக்கு உரைக்கின்றது என்று தான் அர்த்தம். இரண்டாவதாக நீளமாக வளர்ந்திருக்கும் மரங்களால் மட்டும் நம் சுற்றுச்சூழல் (ecosystem cycle) சுழற்ச்சிக்கு உண்டாவதில்லை. சிறு சிறு புட்களின் அடர்த்தியே அதனைச் சொல்லும்.காட்டுத்தீ எற்படுவதால் அவ்விடத்தில் உள்ள பெரிய மரங்கள் வறண்டு அவ்விடங்களில் சிறிய புற்கள் நிறைய முளைக்கும் .சிறிய புற்களின் அளவுகள் கூடும்போது அதனை மேய்வதற்கு மான்களும்,விலங்குகளும் , வறையாடுகளும் அதிகமாக வரும்,அதனை வேட்டையாட புலிகளும்,சிங்கங்களும் அதனை நோக்கி வரும். இது அவ்விடத்தில் இனப் பெருக்கம் செய்வதற்கான சூழலை உருவக்கும் இந்த சூழ்நிலையில் (ecosystem)அதாவது சுற்றுச்சூழல் ஒரு முழுமையை அடையும். என்று ஒரு சுற்றுச்சூழல் முழுமையை அடைகிறதோ?அன்றே இயற்கை தனது வல்லமையை இன்னும் அதிகரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். இதனையே சுற்றுச்சூழல் வட்டம் என்கிறோம் ,அதாவது cycle of ecosystem என்று கூறுவார்கள்.
Ecology of yellow stone park returned by wolves” என்ற புத்தகத்தில் ஓநாய் கொண்டு எப்படி yellow stone parkல் சுற்று சூழல் சரி செய்யப்பட்டது என்பதை விவரித்திருப்பார்கள் (இதனை முழுமையாக அடுத்த பதிவில் கூறுகிறேன்).
இதன் மூலம் நான் மீண்டும் கூறுகிறேன் காட்டுத்தீ மனித இனத்திற்கு, இயற்கை இன்னும் அழியவில்லை என்பதை எடுத்துக்காட்டும் ஒரு மகத்துவச் செயலே.
காலம் காலமாக காட்டெரிப்பு வேளாண்மை செய்த தமிழன் இதை அறிவான்.! அண்டி புழைக்க வந்த ஆங்கிலேயனின் சொல்லை நம்பி நாம் இன்று இதனை தொலைத்து நிற்கின்றோம்.

நன்றி
ழகரம்


Comments